ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அவருடைய திரைப்பயணத்தை தொடங்கினார், அதேசமயம் அவருக்கு தெலுங்கு சினிமா மிகுந்த ஆதரவைத் தந்தது. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரின் திறமையும் அழகும் ரசிகர்கள் மற்றும் திரை உலகை ஈர்த்தது, இதனால் ராஷ்மிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவற்றைப் பயன்படுத்தி, அவர் மிக வேகமாக உயர்ந்தார்.
பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு, புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் ஹிட்டாகி, ராஷ்மிகாவுக்கு மேலும் புகழை பெற்றுத்தந்தது. அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புஷ்பா படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா “நேஷனல் கிரஷ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டார். அவரது எக்ஸ்பிரஷன் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர். இதற்கிடையில், தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் தோல்வியடைந்தது. மேலும் விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் விமர்சன ரீதியாக தோல்வி பெற்ற நிலையில், கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அவர் போராடிக்கொண்டிருக்கிறார்.
தமிழில் தோல்வியடைந்தாலும், ஹிந்தியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. சமீபத்தில், அவர் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்தார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ராஷ்மிகாவின் நடிப்பும் கிளாமரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று, புஷ்பா 2 படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது. அதில் ராஷ்மிகாவின் நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்கிடையில், ஒரு ரசிகர் ட்விட்டரில், ஆங்கிலத்தில் பேசினால் ராஷ்மிகா அனைவருக்கும் புரியும் என்று குறிப்பிட்டார். அதற்கு பதில் கூறிய ராஷ்மிகா, “ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் அதனாலே நான் அவர்களது மொழியை அவமதித்ததாக நினைப்பார்கள் அல்லது மொழியே தெரியாமல் நடித்தேன் என்று விமர்சிப்பார்கள். அதனால், நான் நடிக்கும் மொழியில் பேசுகிறேன்” என்றார்.