வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ரசிகர்களை அடிக்கடி தன்வசம் வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நடிகைகள் அவர்களுடைய புகைப்படங்கள், ட்ராவல் மற்றும் டெய்லி ரொட்டின் என பல புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதனால் அடிக்கடி இவரைப் பற்றி பேசி இந்த மாதிரி ஒரு ஹீரோயின் இருக்கிறார் என்று மறக்காத வகையில் வலம் வரும் நடிகைகள் பலர்.

இப்படி சமீப காலமாக மாளவிகா மோகனன் தொடர்ந்து கிளாமர் போட்டோ சூட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார் மாளவிகா மோகன்.

இதனைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட, தளபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் ஸ்ரீ ராஜா சாப் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஹீரோயினாக பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார் மாளவிகா மோகன்.அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை காந்தமாய் இழுத்து வருகிறது.