‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் இது.

இந்த படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படக்கதை ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.இப்படம் குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் வண்ணம் உள்ளது.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டோம் அவர் பார்க்கலாம் என்றுவிட்டார்.எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டோம் பின்னர் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார்.

சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் அமைதியாக இருந்தார்.சில நாட்கள் பின்னர் அவரை சந்தித்த போது, என்னுடைய மகள் கேட்ட அதே கேள்வியை அவரும் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார். எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.இப்படம் வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.