Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தங்கலான் படத்துக்கு என்னதான் ஆச்சு?‌‌ புலம்பும் ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில வேலைகள் காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், தேர்தல் சூழ்நிலை காரணமாக தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.ஜூன் மாதமும் நெருங்கும் வரும் நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதுவரை எந்தவொரு வெளியீட்டு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தங்கலான் மட்டுமின்றி கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜூன் மாதத்தில் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகுமா என சந்தேகிக்கப்படுகிறது. அப்படி வெறியானலும் ஜூன் இறுதியில் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, காரணம் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது.

ஜூலை மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளதால், தங்கலான் படக்குழு அந்த மாதத்திலும்‌ படத்தை வெளியிட‌ தயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய நடிகர்களுடன் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் தங்கலான் படம் அப்படங்களுக்கு சரியான போட்டியாக அமையுமா என்ற தயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

செப்டம்பர் மாதம் கோட், அக்டோபர் மாதம் வேட்டையன் என அடுத்தடுத்த படங்கள் வரிசையாக காத்திருப்பதால், ஆகஸ்ட் மாதம் மட்டும் தான் படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே, தங்கலான் படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானால் எளிதாக இருக்கும், இல்லையெனில் அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அதற்குள் வீர தீர சூரன் படமே வெளியாகிவிடும் போல என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News