Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கூலி படத்தை தொடர்ந்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கும் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா தரப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் இதுவரை 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூல்களைப் பதிவு செய்த படங்களின் பட்டியலில் இந்த படம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த படத்தில், கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் பாடல் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அனுமதியின்றி குணா படத்தின் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.படத்தில் இடம்பெறும் “கண்மணி அன்போடு காதலன்..” பாடலை நீக்க வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த நோட்டீஸில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News