இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து மும்முரமாக நடந்து வந்த சூழலில் இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருந்தார்.
கடந்த 6ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு முதல் ஷெட்யூல் கடந்த 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீண்டும் எல்ஐசி படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதனால் டிராகன் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் எப்போது மீண்டும் துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகராக கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தில் இயக்குனராக ஜெயம் ரவியுடன் களமிறங்கிய இவர், முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.
படம் ஜெயம் ரவிக்கும் சிறப்பாக கை கொடுத்தது. இதையடுத்து அடுத்ததாக லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்து இயக்கியிருந்தார். இந்தப் படம் சூப்பர் சூப்பர் ஹிட்டடித்த சூழலில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.