ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி பிரபலங்களில் ஒருவராகத் திகழ்கிறார். இன்று அவர் தனது 41ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் , பிரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஜூனியர் என்.டி.ஆர் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இது என்.டி.ஆர் நடிக்கும் 31ஆவது படமாகும், எனவே இதற்கு தற்காலிகமாக #NTR31 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களின் எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் #NTRNEEL எனவும், `ஹேப்பி பர்த்டே மேன் ஆஃப் மாஸஸ் என்.டி.ஆர்’ எனவும் பதிவிட்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனக் கூறியுள்ளனர். மேலும், என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் நேற்று வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.