திரைப்பட விநியோகம், தயாரிப்பு, நடிப்பு மற்றும் இயக்கம் என பல்வேறு துறைகளில் கலக்கியவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். குற்றம் கடிதல் 2 படத்தில் இவர் முக்கிய கஃப்காதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.குற்றம் கடிதல் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இப்படத்திற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜே.எஸ்.கே. தயாரிப்பில் உருவான ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்கவுள்ளார்.இப்படத்தை ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றி ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில், “கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். பணியில் யோருந்து ஓய்வு பெரும் சமயத்தில் சிறந்த நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவரிடம் வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை சம்பவங்களை தொகுத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் பகிர்ந்துள்ளார்.

‘குற்றம் கடிதல்’ 2 படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது. நடிகர்கள் மற்றும் பட குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
