நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது வினேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தமாகியுள்ளார். நேற்று காலை 9 மணிக்கு டைட்டில் ப்ரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த படத்தின் தலைப்பு வெளியாகாததால் ரசிகர்கள் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தனர்.
பின்னர் இந்தப் படத்தின் டைட்டில் மதியம் இரண்டு மணிக்கு வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி டைட்டில் தீயாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று அதற்கேற்ப படக்குழுவினர் டைட்டிலை ஃபயராக இறக்கியுள்ளனர்.இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ அதிரடியாக வெளியானது.
இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவில் இயக்குனர் அஸ்வத் அர்ச்சனா கல்பாத்தியிடம் மேடம் ஃபயராக டைட்டில் கேட்கிறீர்களா என்று கேட்க அவரும் ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு அங்கே டைட்டில் வெளியீட பட்டன் ஒன்று வைத்திருந்தனர் அதை அழுத்த படத்தின் டைட்டில் வெளியானது இப்படத்திற்கு பெயர் “டிராகன்” என்று வைத்துள்ளனர்.