பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் பற்றி நடிகர் விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த விஷாலிடம் இரண்டு பெரிய நடிகர்களின் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு இது ஆரோக்கியமான விஷயம்.
எனது படம் தாமிரபரணி,போக்கிரி, ஆழ்வார் என மூன்று படங்கள் 2007 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் வெளியானது வெற்றியும் பெற்றது. அதனால் ரசிகர்களுக்கு எந்த பிடிக்கும் என்பது அவர்களது தேர்வு. தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் இல்லை அலசி ஆராய்ந்து பார்த்து தான் வெளியிடுகிறார்கள்.அதனால் துணிவு மற்றும் வாரிசு நல்ல போட்டி தான் என்றார் நடிகர் விஷால்.