இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம்தான். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஜீன்ஸ் படத்தின் நவீன தொழில்நுட்பம், உலக அதிசயங்கள் ஏழையும் காண்பித்து ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.
அவர் எடுத்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதலில் கமல் நடிப்பதாக கூறப்பட்டது. பின் அர்ஜுன், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து வெளியானது.
இது பற்றி கமல் ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் ஜென்டில்மேன் கதை வேறு அதைத் தான் என்னிடம் சொன்னார். அவர் சொன்ன பிராமண பிள்ளை கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை அதில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஒதுங்கி விட்டேன். இப்போ வெளிவந்த ஜென்டில்மேன் கதை வேறு” என்று நடிகர் கமல் கூறினார்.