Touring Talkies
100% Cinema

Monday, October 13, 2025

Touring Talkies

எத்தனை மொழி படங்களிலும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமை – நடிகை மம்தா மோகன்தாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தற்போது பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதியுடன் நடித்துள்ள புதிய படம் ‘மை டியர் சிஸ்டர்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுகுறித்து மம்தா மோகன்தாஸ் கூறியதாவது “இந்தப் படத்தில் நான் அருள்நிதிக்கு அக்காவாக நடித்துள்ளேன். அசாதாரணமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை கதை கூறுகிறது.

படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். உடல் முழுவதும் இரண்டு மணி நேரம் டஸ்கி நிற பெயிண்ட் பூசி நடித்தேன். திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக நெல்லைத் திருநெல்வேலி எனக் கவர்ந்தது. ‘ஏல’ என்று பேசும் அந்த வட்டார மொழி எனக்கு மிகவும் பிடித்தது. இதனால் கதாபாத்திரத்தில் முழுமையாக ரசித்து நடித்து முடித்தேன்.

தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். அதை எப்போதும் காப்பாற்ற நான் போராடுவேன். எத்தனை மொழி படங்களிலும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமை. இங்கு உள்ள ரசிகர்கள் தரும் பாசத்தை எந்த மொழி படங்களிலும் காண முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News