Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உருவாகிறதா யுவன் சங்கர் ராஜாவின் பயோபிக்? இயக்குனர் சொன்ன அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இசையமைப்பாளர். அவர் ‘GOAT’ எனும் புதிய திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது, பாடல் கேட்ட ரசிகர்களிடம் இருந்து சுமாரான வரவேற்பே பெற்றது.

யுவனின் இசை திறமைக்கு என்ன நடந்தது என்று பலரும் ஆழமாகக் கேள்வி எழுப்பினார்கள். எனினும், யுவனின் ரசிகர்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்கள் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா மெட்டுக்கள் மிகப்பெரிய ஹிட்டாகின. இசை உலகில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா போன்ற பிரபலங்களின் காலத்தில் கூட தனது தனித்துவமிக்க இசை மூலம் அவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குறிப்பாக, செல்வராகவன் போன்ற இயக்குநர்களுடன் அவர் அமைத்த கூட்டணிகள் 2000களின் தொடக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை இசையில் பெற்றன.அத்துடன், ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் போன்ற பல பிரபல இயக்குநர்களுடனும் அவர் இணைந்து பணியாற்றியது அவரது இசை வாழ்க்கையில் வெற்றி காலமாகும்.

தற்போது, கவினின் ‘ஸ்டார்’ என்ற புதிய திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநர் இளன் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், யுவனுக்கு அவரது பயோபிக் தொடர்பான ஒன்லைன் குறித்து சொன்னேன் அதற்கு அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

எல்லாம் சரியாக நடந்தால், அந்த திட்டமிடப்பட்ட ஒன்லைன் தொடர்பான ஸ்க்ரிப்ட் வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று அந்த பெட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News