சினிமாவில் பலர் தங்கள் திறமையைக் காட்டி, தனித்துவமான இடம் பெறுவதற்காகப் போராடி வருகின்றனர். அதேபோல், ஹேண்ட்சம் ஹீரோ ஹரிஷ் கல்யாண், சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும் சறுக்கல்கள் ஏற்பட்டாலும், படிப்படியாக கதைக்கு முக்கியத்துவம் அளித்து நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களைக் கவர்ந்தார். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களை ஈர்க்கத் தொடங்கின. இறுதியாக, அவர் நடித்த பார்க்கிங் படம் அவரது நடிப்பைப் பாராட்டும் வகையில் வெற்றி பெற்றது.
தற்போது 100 கோடி வானவில் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரைத் தேடி வந்த நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார். தற்போது ஸ்டார் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
முதலில் ஸ்டார் படத்தில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாண். ஆனால் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அந்த படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டார். ஆனால் அதில் கவின் நடித்து ஸ்டார் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டோமே என ஹரிஷ் கடும் வருத்தத்தில் இருக்கிறார்.