சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தில் தாஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான்.

இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஹிந்திப் படம் ‘சர்பரோஸ்’–இல் துணைக் கமிஷனராக ‘அஜய் சிங் ரத்தோட்’ என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அமீர்கான். அந்த படம் வெளியாகியதிலிருந்து, பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரைப் பாராட்டுவதற்காக சந்திப்பது வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அமீர்கானின் வீட்டிற்கு 25 ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகள் சென்று அவரை நேரில் சந்தித்தனர். அவர்களை சந்திக்க வேண்டும் என்ற அவர்கள் விருப்பத்திற்கு அமீர்கான் நேரம் ஒதுக்கி, தன் இல்லத்திலேயே வரவழைத்து சந்தித்து மகிழ்ந்தார்.