Advertisement

முதல் பாக்., இணையத் தொடரை வெளியிடும் நெட்பிளிக்ஸ்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்ட நெட்பிளிக்ஸ், பிற நிறுவனங்களின் படைப்புகளை வெளியிடுவதுடன், திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களையும் நேரடியாகத் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சாக்ரட் கேம்ஸ்’, ‘டெல்லி கிரைம்’ போன்ற தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாகத் திகழும் நெட்பிளிக்ஸ், தனது முதல் பாகிஸ்தான் இணையத் தொடரைத் தயாரித்துள்ளது.

‘ஜோ பச்சே ஹைன் சங்க் சமேத் லோ’ (Jo Bache Hain Sang Samet Lo) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஃபர்ஹாத் இஸ்தியாக் இயக்கியுள்ள இதில், பாகிஸ்தானின் பிரபல நடிகர்களான ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா ஆமிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது இத்தொடரின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply