‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம், அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ஜாக்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதனுடன், “ஒரு அப்பா. ஒரு மகன். அவனின் முதல் திரைப்படம். கேமராவுக்குப் பின்னால் மறக்க முடியாத நாட்கள். ‘ஆதித்ய வர்மா’ வெளியாகி 7 ஆண்டுகள் கடந்துவிட்டன” எனப் பதிவிட்டுள்ளார். நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
