Advertisement

‘RC17’ படத்தின் புதிய தோற்றத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் நடிகர் ராம் சரண்!

நடிகர் ராம் சரண், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ராம் சரண். சுகுமார் இயக்கத்தில் உருவாகும் தனது 17-வது படத்திற்காக உடலமைப்பை மாற்றும் பணிகளை அவர் தொடங்கியுள்ளார். இதற்காகத் தனது தனிப்பட்ட பயிற்சியாளரின் மேற்பார்வையில் தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன்னதாக, மூன்று நாள் ஓய்வுக்காக ரகசியமான இடத்திற்குச் சென்றிருந்த ராம் சரண், தற்போது வீடு திரும்பியதும் படத்திற்கான தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்குத் தேவையான உடல் தகுதியைப் பெறுவதற்கான பயிற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பெத்தி’ படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் இந்தப் படம் தற்காலிகமாக ‘ஆர்.சி.17’ என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம் சரண் – சுகுமார் மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply