டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘காகித மலர்’!

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ஏசியன் ஃபியூச்சர் பிரிவில் உலகத் திரையிடலுக்குத் தேர்வானது‌‌.அங்கு இப்படம் இரண்டு காட்சிகளாகத் திரையிடப்பட்ட நிலையில், இரண்டுமே பார்வையாளர்களால் நிரம்பி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்தன. ஜப்பானிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை ரசித்ததுடன், திரையிடல் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் எழுந்தன.

Add a Comment

Leave a Reply