4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’!

இயக்குநர் ஷங்கரின் திரைப்பயணத்தில் முதல் படமாக அமைந்த ‘ஜென்டில்மேன்’, 1993-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. அர்ஜுன், மதுபாலா இணைந்து நடித்த இப்படத்தில் வினீத், சுபஸ்ரீ, நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில், ராஜன் பி. தேவ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே.டி. குஞ்சுமோன் தயாரித்த இப்படத்திற்கு பாலகுமரன் வசனம் எழுதியிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக, பிரபுதேவா – கவுதமி நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பல ஆண்டுகளைக் கடந்தும் பிரபலமாக உள்ளது. ஷங்கரின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அர்ஜுனின் நடிப்பு, ரஹ்மானின் இசை எனப் பல அம்சங்கள் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தன.

இந்நிலையில், பழைய நினைவுகளை மீண்டும் திரையில் கொண்டுவரும் வகையில் ‘ஜென்டில்மேன்’ மறுவெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட 4K அல்ட்ரா HD காட்சித்தரம் மற்றும் 7.1 சரவுண்ட் சவுண்ட் வசதியுடன் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கிரேஸ் ஃபிலிம் மீடியா சார்பில் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

Add a Comment

Leave a Reply