விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவான ‘டிரெயின்’… கவனம் ஈர்க்கும் ரிலீஸ் டீஸர்!

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இதில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்மச் சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து, மிஷ்கின் இசையமைப்பில் கபிலன் வரிகளில் சுருதி ஹாசன் பாடியுள்ள ‘கன்னக்குழிக்காரா’ என்ற முதல் பாடலும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, படப்பிடிப்புத் தளத்தின் பின்னணிக் காட்சிகள் அடங்கிய வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் ஒவ்வொரு காட்சியையும் மிஷ்கின் நுணுக்கமாக வடிவமைக்கும் விதமும், தனது கதாபாத்திரத்திற்காக விஜய் சேதுபதி மேற்கொண்ட அர்ப்பணிப்பும் இடம்பெற்றிருந்தன. தற்போது படத்தின் ரிலீஸ் டீசரும் வெளியாகியுள்ளது. ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply