சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளா?

நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி, சேத்தன் தியோலேகர் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். கன்னடத் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் ஹரி சந்தோஷ் இப்படத்தை இயக்குகிறார்.

சசிகுமாருடன் சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். மேலும் ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக், வசந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஹரி சந்தோஷ் கூறுகையில், “இது புதுமையான குடும்பத் திரில்லர் கதையாக உருவாகிறது. திரில்லர் படத்திற்குத் தேவையான பரபரப்புடன், மற்ற அம்சங்களையும் சரியான விகிதத்தில் இணைத்து ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழில் எனது முதல் படத்திற்காக டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading