அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணியில் உருவான‘பாதயாத்திரா’… டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

மலையாளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழும் மம்முட்டி, தனது தனித்துவமான நடிப்பால் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். தமிழில் ‘மௌனம் சம்மதம்’, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தம்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். நடிப்புடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் அவர், தற்போது அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘பாதயாத்திரா’ படத்தில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தைத் திரையில் காண ரசிகர்களும் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading