மறைந்தார் தேனிசை தென்றல் தேவா… திரைப்பிரபலங்கள் இரங்கல்!

தமிழ் திரையிசையில் கானா பாடல்களுக்கு தனி அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் தேவா காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

இசையமைப்பாளராக 1989-ம் ஆண்டு வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேவாவுக்கு, அடுத்த ஆண்டில் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் மூலம் அவரது இசை பரவலான ரசிகர்களைச் சென்றடைந்தது.

இசையமைப்பாளராக மட்டுமின்றி, பாடலாசிரியராகவும் பாடகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் தேவா. குறிப்பாக, பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading