துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தில் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் வாயிலாகவே அவர் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது.
கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ், லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
வரும் நவம்பர் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியான டீசரில் துல்கர் சல்மானின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் முக்கியக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
