எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா… 7 முறை வந்த வாய்ப்பை நிராகரித்த வித்யா பாலன்!

கர்நாடக இசையின் வரலாற்றில் தனித்த இடம்பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை தற்போது வெள்ளித்திரைக்கு வரவுள்ளது. ‘எம்எஸ் – எ லேகசி ஆன் ஸ்கிரீன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படம் குறித்த மற்றொரு தகவலும் கவனம் பெற்றுள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் நடிகை வித்யா பாலனும் ஒருகட்டத்தில் இணைக்கப்பட இருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தன்னை ஏழு முறை அணுகியதாகக் கூறியுள்ள அவர், உரிய உரிமைகளையும் அனுமதிகளையும் பெற்ற பிறகே படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக முன்வைத்ததாகவும், அதனால் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜீவ் மேனன் முன்னெடுத்த இந்தப் படத் திட்டம் நீதிமன்றத் தடையால் கைவிடப்பட்டது. இதனால், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரையில் சித்தரிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போனது தனக்கு வருத்தத்தை அளித்ததாக வித்யா பாலன் குறிப்பிட்டுள்ளார். தற்போது ராஷ்மிகா அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading