தேசிய விருதைவிட ஆஸ்கர் வென்றதுபோல் இருந்தது!” – ரஜினியின் பாராட்டை நினைவுகூர்ந்த சுராஜ் வெஞ்சாரமூடு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னைப் பாராட்டிய நிகழ்வை சுராஜ் வெஞ்சாரமூடு நினைவுகூர்ந்துள்ளார். நள்ளிரவு படமாக்கப்பட்ட ஒரு காட்சியில், அதிகாலை 2.30 மணிக்கு தனது காட்சிகள் முடிந்த பிறகும் ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்திலேயே இருந்து, சுராஜ் நடிக்கும் காட்சியைப் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காட்சி முடிந்ததும் ரஜினிகாந்த் கைதட்டி, தனது நடிப்பைப் பாராட்டியதாகவும், அதைப் பார்த்த படக்குழுவினரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் சுராஜ் கூறியுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தாலும், ரஜினிகாந்தின் பாராட்டு ஆஸ்கர் விருது வென்றதைப் போலத் தனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும், அந்த அனுபவத்தை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading