‘வெற்றிவேல்’, ‘அயோத்தி’ படங்களைத் தொடர்ந்து டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணைந்த சசிகுமார்!

இயக்குநரும் நடிகருமான சசிகுமார், ‘வெற்றிவேல்’, ‘அயோத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். தற்போது பெயரிடப்படாத இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இயக்குநர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் இணைந்து சுல்தான் ஜசானி, சேத்தன் தியோலேகர் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். கிரிஷ் கே. நகரேச்சா இணைத் தயாரிப்பில் பங்கேற்கிறார். சஞ்சய் விஜயராகவன் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். 6 டைமென்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியாவும் இந்தத் தயாரிப்பில் இணைந்துள்ளது.

இதற்கிடையே, சசிகுமார் பல்வேறு திரைப்படப் பணிகளில் பிஸியாக உள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் சைத்ரா ஜே. ஆச்சார் உடன் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். மேலும், ‘ஃபிரீடம்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் மற்றும் கன்னட இயக்குநர் யோகராஜ் பட் ஆகியோரின் புதிய படங்களிலும் சசிகுமார் பணியாற்றி வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading