‘காதல் தி கோர்’ படத்தை இயக்கிய ஜியோ பேபியின் புதிய படம்… ஹீரோ யார் தெரியுமா?

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்திற்குப் பல விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில், ஜியோ பேபி தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். நடிகர் ரோஷன் மேத்யூ நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஹூமன்’ (Human) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜியோ பேபியின் முந்தைய படங்கள் பேசுபொருளான நிலையில், புதிய படமான ‘ஹூமன்’ எந்தக் கதைக்களத்தில் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading