மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அலர் ஸ்டூடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை கடந்த பிப்ரவரியில் வெளியானது. இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு ஏற்படும் எதிர்பாராத சம்பவம், அவரது வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் மையக்கரு எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மர்மச் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
