நடிகைகளுக்கு நெருக்கமான காட்சிகளில் நடிக்க சொல்லி அழுத்தம் கொடுக்க கூடாது…- ராதிகா ஆப்தே!

ஒரு நடிகர் தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை வைத்து, இன்றும் அதே விஷயங்களுக்கு அவர் தயாராக இருப்பார் என்று முடிவு செய்ய முடியாது என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். குறிப்பாக நெருக்கமான காட்சிகள் தொடர்பாக தனக்கு வந்த சில கோரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், காலப்போக்கில் தனது முடிவுகள் மாறியிருப்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

சில படங்களில் கதையுடன் நேரடியாக தொடர்பில்லாத நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு தன்னை வற்புறுத்தியதாக ராதிகா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பதால், அவற்றுக்கு தற்போது தான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என அவர்கள் நினைத்ததாகவும் கூறியுள்ளார். தனது ஆரம்பகாலத்தில் நான்கு, ஐந்து படங்களில் நிர்வாணமாக நடித்திருந்தாலும், தற்போது அதுபோன்ற காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கோரிக்கைகள் அத்துடன் நிற்கவில்லை என்றும் ராதிகா கூறியுள்ளார். சில விநாடிகள் மட்டுமே என்பதால் முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று சிலர் கேட்டதாகவும், அதற்கும் தான் சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றொரு படத்தில் சண்டைக் காட்சியில் உள்ளாடை அணிந்து நடிக்க முடியுமா என கேட்கப்பட்டபோதும் மறுத்ததாகவும், முன்பு இதுபோன்ற காட்சிகளில் நடித்ததை சுட்டிக்காட்டியவர்களிடம் “அப்போது செய்தேன், இப்போது முடியாது” என்று பதிலளித்ததாகவும் கூறியுள்ளார். ஒரு நடிகர் முன்பு எதையாவது செய்திருக்கிறார் என்பதற்காக, அதை மீண்டும் செய்ய அவர் சம்மதிப்பார் என்று கருதுவது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றிக்காக நடிகர்களின் விருப்பத்தையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply