“சமூகத்துக்கு கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்” – நடிகர் கவின்!

நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 28-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் கவின் அளித்த பேட்டியில், தான் யாருக்கும் ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை முறையில் பிடித்த விஷயங்களை மக்கள் எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி என்றும், தன்னால் முடிந்தவரை சமூகத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் இருப்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் மட்டுமே புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதாகக் குறிப்பிட்ட கவின், நிஜ வாழ்க்கையில் தான் புகைபிடிப்பதும், மது அருந்துவதும் இல்லை என தெரிவித்துள்ளார். திரையிலும் இதுபோன்ற காட்சிகளைத் தவிர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்க தனக்கு சில படங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading