பிரேமலு இயக்குனரின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கிரிஷ் ஏ.டி, ‘பிரேமலு 2’ படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால், கதையில் முழு திருப்தி இல்லாததால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இதில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading