நடிகை சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நடிகை சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து தற்போது ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 1980களின் பின்னணியில் குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் ஆக்ஷன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் தற்போது ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த படம் வரும் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading