விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தனம் தொடர் 380 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. நடிகை சத்யா தேவராஜன் மற்றும் நடிகர் சத்யா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த தொடர் ‘தனம்’. இந்தத் தொடர் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா தேவராஜன், தனம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார்.மேலும் இந்தத் தொடரில் சத்யா எஸ்.கே., ரூபா ஸ்ரீ, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், விஜே கல்யாணி, பிரியங்கா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Add a Comment
