பின்னணி பாடகி சாருலதா மணி ‘தென்றலில்’ என்ற பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார். அவரே பாடலை எழுதி, இசை அமைத்து பாடியுள்ளார். ஒரு கடற்கரையில் நடக்கும் காதலின் பிரிவு வலியை இந்த ஆல்பம் பாடுகிறது. புது முகங்கள் மாளவிகா, தவன் நடித்துள்ளனர். தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார். இதனை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘தக் லைப்’ படத்தில் இடம்பெற்ற, “அஞ்சு வண்ணப் பூவே” என்ற பாடலை பாடியவர் சாருலதா மணி. இதுதவிர என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன்), சில்லாஸ் (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் என்னும் நிக்காஹ் ), சடா நானு (மகாநடி) உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர்.
Add a Comment
