பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய்குமார், பரேஷ் ராவல், தபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் ‘பூத் பங்களா’. தொடர்ந்து தோல்விகளால் தடுமாறி வந்த அக்ஷய்குமாருக்கு இந்தப் படம் மீண்டும் வெற்றியைக் கொடுத்து அவரை மீட்டெடுத்துள்ளது. இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த படங்களில் 200 கோடியைக் கடந்த 12வது படமாகவும், 100 கோடியைக் கடந்த 20வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.
Add a Comment
