ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ பட டீஸர்!

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’, ‘லோகா’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1950களைக் காலப்பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading