‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானவர் விஜய்குமார். அந்த திரைப்படம் தனது வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும், சமூக கருத்துகளையும் எடுத்துரைத்த விதத்தாலும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் ‘உறியடி 2’, ‘பைட் கிளப்’, ‘எலக்ஷன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் தற்போது இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய்குமார் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘அறிவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூக கருத்துடன் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
