35 கோடி வசூலை கடந்த ‘வித் லவ்’

டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். தியேட்டர்களில் தொடர்ந்து மக்கள் மத்தியல் வரவேற்பை பெற்று வரும் ‘வித் லவ்’ படத்தின் அதிகாரபூர்வ வசூல் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படம் 25 நாட்களில் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading