அஜித் குமார் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பில்லா 2. இன்றுடன் இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகின்றது என்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பில்லா 2 படம், அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கப்பட்டிருந்த ஒரு கேங்ஸ்டர் படம் ஆகும். இந்த படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள், பின்னணி இசை, கலர் கரக்ஷன்ஸ், ஆர்ட் டிப்பார்ட்மெண்ட், காஸ்டியூம் என அனைத்துமே உலகத்தரத்தில் இருந்தது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போல் அந்த காலகட்டத்தில் ஆகச்சிறந்த க்ளைமேக்ஸ் காட்சியாக எந்த படத்திலுமே இடம் பெறவில்லை என கூறலாம்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more