Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள பகத் பாசில் ! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வேட்டையன்’. ‘ஜெய் பீம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பகத் பாசில் தனது காட்சிகளுக்கு டப்பிங் செய்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News