Thursday, April 25, 2024

குறி வச்சா தப்பாது! வேட்டையன் ரீலீஸ் அப்டேட்… இது தான் கதையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் போன்ற ஸ்டார்களும் பகத் பாசில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களின் நடித்துள்ளனர்.இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர்ல் ரீலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டையும் மிகப்பெரிய வசூலையும் கொடுத்தது. அதேசமயம் கடந்த பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் திணறியது .இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் சொல்லப்படுகிறது.மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வேட்டையன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று நம்பப்படும் நிலையில் இப்படத்தின் மொத்த சூட்டிங்கும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் அதைதொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் வேட்டையன் திரைப்படம் தீபாவளி‌ சமயத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது தற்போது அந்த தகவல் உறுதியாகும் வகையில் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படத்தின் மூலம் ஒன்றாக இணைவது இப்படத்தை மேலும் வலுவாக சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது.இப்படி பல அம்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள வேட்டையன் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News