Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

வெற்றிநடை போடும் வாழை… வசூலில் வென்றதா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல் மற்றும் பலர் நடித்த வாழை படம் கடந்த வாரம் வெளியானது. மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கினர். 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது, மேலும் படப்பிடிப்பு கடந்த ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது.

இப்படத்தை முதலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். பிறகு தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்து, கடந்த வாரம் வெளியிட்டனர். எதிர்பார்ப்பை விடவும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் மட்டும் 9 கோடி ரூபாய் மதிப்பதாக தகவல். மேலும், கடந்த நான்கு நாட்களில் மட்டும் தியேட்டர் வசூல் 10 கோடிக்கும் மேலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாழை படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு கடந்த மாதம் நடந்த போது, மாரி செல்வராஜ் வாழை படத்தை முதலில் இயக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், 50 லட்சம் ரூபாயில் சின்ன பட்ஜெட் படமாக எடுத்துவிடலாம் என திட்டமிட்டதாகவும், பின்னர் மூன்று படங்களை இயக்கிய பிறகு இப்படத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார். கோலிவுட் வட்டாரத் தகவலின் படி, இப்படத்தின் பட்ஜெட் 5 கோடி வரை இருக்கலாம், அதைவிடக் குறைவாகவும் இருக்கலாம். இருப்பினும் முதல் வார இறுதியிலேயே இப்படம் அதிக லாபத்தை ஈட்டியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News