போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை செலவு செய்யாமல், மொட்டைமாடியில், தனது வளைந்து நெளிந்து இருக்கும் இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே போட்டோஷூட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.


இணையதளத்தில் ஏராளமான பாலோவர்களை கொண்டிருக்கும் இவர், தனது ரசிகர்களுக்காகவே விதவிதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, இவர் ஜிம்மில் வியர்க்க விறுவிறுப்பாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், உங்கள் இடையழகின் ரகசியம் இதுதானா எனக் கேட்டு வருகின்றனர்.