தமிழ் திரைப்படமான “தமிழன்” மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து இந்தி திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்தினார். 2018-ம் ஆண்டில் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.
தற்போது கணவர் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா, அடிக்கடி சமூக வலைதளங்களில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், தனது காதலான கணவர் நிக் ஜோன்ஸுடன் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.