Tuesday, November 19, 2024

விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர்… தங்கலான் படம் குறித்து இயக்குனர் சேரன் புகழாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி நூறு கோடி ரூபாய் வசூலையும் அள்ளி உள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகன், பாரதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலர் தங்களது கதாபாத்திரங்களில் அருமையாக நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரின் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. பா.ரஞ்சித் , விக்ரம் இருவரின் அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது.. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். கதை சொன்ன விதமும் காட்சிபடுத்திய விதமும்  அசரவைத்தது.. முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது. மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை.. மொழியாடலில் இருந்த பழமை இன்னும் அழகு சேர்த்தது.. விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர்.. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் அவரை அர்ப்பணித்திருந்த விதம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. இணை என எவரைத்தேடினும் கிடைக்கவில்லை.

தம்பி ஜி.வி.பிரகாஷ் பெருமைப்படத்தக்க இசையால் இரைச்சலின்றி காட்சிகளை வியக்கவைத்ததை ரசித்தேன்.  திரைப்படத்தில் குறைகள் இருப்பினும் ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடை மனதில் கொள்ளாமல் (எனக்கில்லை) படைப்பு பேசிய அரசியலை கொண்டாடியேஆகவேண்டும் அதுவே நாம் இந்த சினிமாவில் இருப்பதை அர்த்தமாக்கும்‌.இரவுக்காட்சி முடிந்து நேரம் 1 மணி ஆனாலும் என் தொலைபேசியில் ரஞ்சித்தின் எண்ணை அழுத்தினேன்.. ஒருவரின் உழைப்பை பாராட்ட நேரமும் காலமும் காரணங்களும் பார்த்தால் அது பொய் என்பதால். சேதுவின் போதும் இரவுக்காட்சி பார்த்து நானும் பாலாவும் விகரமும் அதிகாலை 4 மணிவரை பேசியது நினைவு வந்தது.

அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்.. அது எவராயினும்.. ஏனெனில் படைப்பாளிகளின் நோக்கம் வென்று சமூகம் சமமாகும்போது நீயும் நானும் கைகோர்த்தே ஆகவேண்டும்.

- Advertisement -

Read more

Local News