தமிழ் சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் மற்றும் புரட்சிக் கலைஞர் எனப் பெயர் பெற்ற விஜயகாந்தின் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.இந்நிகழ்வு தமிழ் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதிச்சடங்கிற்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைவீரன் படத்தில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அந்த படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தில் யானைகளுடன் நடித்து அவர் பிரமிக்க வைத்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்தின் மகனுடன் நடிப்பேன் என்று உறுதியளித்தார், அதன்படி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
