தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. பல படங்களில் நடித்து பிரபலமான அவர், பாலிவுட்டிலும் வாய்ப்புகளைப் பெற்றார். அங்கு நடித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்களாம். இந்த நிலையில், தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளன.
தமிழில் வெற்றி பெற்றது போலவே, தெலுங்கிலும் தமன்னா தனது திறமையை நிரூபித்தார். கோலிவுட், டோலிவுட் ஆகிய துறைகளில் முன்னணியில் இருந்தாலும், பாலிவுட் வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தன. அங்கு அவர் நடித்த படங்களும் வெப்சீரிஸ்களும் வெற்றி பெற்றன.பின்னர் தனது க்ளாமரரை அதிகரித்தார் தமன்னா.
‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் நடித்தபோது, அவரை காதலிக்கத் தொடங்கினார். இருவரும் இதனை உறுதி செய்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் தமன்னா வெற்றிகரமாக நடித்ததை தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் அது பெரிய அளவில் ட்ரெண்டானது.
தமன்னா தமிழில் கடைசியாக நடித்த படம் சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’. அந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. பேயாக நடித்த அவரின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்தது.
தற்போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க நிற உடையணிந்து க்ளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் 35 வயதாகியும் அவரது கவர்ச்சி குறையவில்லை என கமெண்ட் செய்து, அந்தப் புகைப்படங்களை ட்ரெண்டாக்கியுள்ளனர்.