Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஷ்யாவில் இளையராஜா நடத்தவுள்ள சிம்பொனி இசைக்கச்சேரி… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் 81வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோவுக்கு வெளியே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ரசிகர்கள் திரண்டனர். அவர்களை சந்தித்த இளையராஜா அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனால் இளையராஜா இந்த பிறந்தநாளில் பெரிதாக உற்சாகம் காட்டவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள்” என்றார். ஆனால், எனது மகளை இழந்ததால், இந்த பிறந்தநாள் விழாவை என்னால் கொண்டாட முடியாது.

இதனிடையே, சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஓலெக் அவ்டிவ், இளையராஜவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளையராஜாவின் பிறந்தநாளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளேன் என்றார்.

பின்னர் அவர் ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர்” என்றார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மாஸ்கோவில் நடத்த உள்ளோம். ரஷ்ய இசைக்கலைஞர்கள் வைத்து சிம்பொனி கச்சேரியை இளையராஜா நடத்தவுள்ளார். ஜூலை மாதம் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News